Thursday, 28 February 2013

மத்திய பட்ஜெட் 2013- முக்கிய அறிவிப்புகள்

பாதுகாப்புத்துறைக்கு ரூ. 43,000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு
ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு- வரி ஏதும் இல்லை
ரூ. 2 முதல் ரூ. 5 லட்சம் வரை- 10% வரி
5 லட்சம் முதல் 10 லட்சம் வரை- 20% வரி
20 லட்சத்துக்கு மேல் ஊதியம் உள்ளவர்களுக்கு -30% வருமான வரி
1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு- 30 சதவீதம் பிளஸ் 10 சதவீதம் வரி
கூடுதல் நேரடி வரிகள் மூலம் ரூ. 30,000 கோடி கூடுதலாகக் கிடைக்கும்
கூடுதல் மறைமுக வரிகள் மூலம் ரூ. 4,700 கோடி கூடுதலாகக் கிடைக்கும்
ஏசி ஹோட்டல்கள் அனைத்துக்கும் சேவை வரி விதிப்பு
மார்பிள் மீதான வரி சதுர மீட்டருக்கு 30 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக அதிகரிப்பு
ரூ. 2000க்கு மேல் அதிக மதிப்புள்ள செல்போன்கள் மீதான வரி 6 சதவீதம் அதிகரிப்பு
சிகரெட் மீதான வரி 18% அதிகரிப்பு
எஸ்யூவி கார்கள் மீதான வரி 20 சதவீதத்திலுருந்து 30 சதவீதமாக உயர்வு
வெளிநாட்டு கார்கள், பைக்குகள் மீதான இறக்குமதி வரி 75 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்வு
வெளிநாடுகளில் இருந்து ஆண்கள் ரூ. 50,000 மதிப்பு வரை தங்கம் கொண்டு வரலாம்
பெண்கள் 1 லட்சம் மதிப்பு வரை தங்கம் கொண்டு வரலாம்
வருடத்துக்கு ரூ. 10 கோடிக்கு மேல் ஈட்டும் நிறுவனங்களுக்கு 5 முதல் 10% கூடுதல் வரி
வருமான வரிகளில் மாற்றம் இல்லை
கல்வித் திட்டங்களுக்காக கூடுதல் வரி
ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 10% கூடுதல் வரி
இது 42,800 பேருக்கு மட்டுமே பொறுந்தும்
ரூ. 5 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு ரூ.2000 வரிச் சலுகை
1.8 கோடி பேர் பலனடைவர்
பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்


 Union Budget 2013 Highlights
'நிர்பயா பெண்கள் நிதி' உருவாக்கப்படும். இதற்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கப்படும்
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமை-ப.சி
294 புதிய எப்எம் ரேடியோ நிலையங்களுக்கு அனுமதி
1 லட்சம் பேர் கொண்ட எல்லா ஊர்களிலும் தனியார் எப்எம் ரேடியோ ஸ்டேசன் அமையும்
பாதுகாப்புத்துறைக்கு ரூ. 2,03,000 கோடி ஒதுக்கீடு
10,000 பேர் கொண்ட எல்லா ஊர்களிலும் எல்ஐசி அலுவலகம் அமைக்கப்படும்
வங்கிகளிலும் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டும் வசதி ஏற்படுத்தப்படும்
பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் சிறப்பு வங்கி துவக்கப்படும்
இந்த பெண்கள் வங்கி நாடு முழுவதும் கிளைகளை துவக்கும்
இது இந்தியாவின் முதல் பொதுத்துறை பெண் வங்கியாக இருக்கும்
இதற்காக முதல் கட்டமாக ரூ. 1,000 கோடி ஒதுக்கப்படும்
13 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 14,000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு
டெல்லி எஐஐஎம்எஸ் மருத்துவ ஆய்வுக் கழகம் போல மேலும் 6 ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்
ஜவுளிப் பூங்காங்களுக்கு ரூ. 50,000 கோடி
கைத்தறி தொழில்துறை நசிந்து போயுள்ளது. இதில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானோர் பிற்படுத்தப்பட்ட பெண்கள்
கைத்தறித்துறை கடன்களுக்கான வட்டியை ரத்து செய்ய ரூ. 96,000 கோடி ஒதுக்கீடு
பட்ஜெட்டை ப.சிதம்பரம் படித்துக் கொண்டிருந்தபோது ஆரம்பத்தில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி
பின்னர் வீழ்ச்சி நின்றது
வீட்டுக் கடனை ஊக்குவிக்க நடவடிக்கை
இதன்மூலம் வீடுகள் கட்டுவது அதிகமாகும், இரும்பு-சிமெண்ட் உள்ளிட்ட துறைகள் வளரும்
வீட்டுக் கடனுக்கான வரி விலக்கு ரூ. 1.5 லட்சத்தில் இருந்து ரூ. 2.5 லட்சமாக அதிகரிப்பு
வீட்டுக் கடன் வாங்கியோருக்கு வருமான வரி மேலும் குறையும்
தூத்துக்குடியில் ரூ. 7,500 கோடியில் புதிய துறைமுகம் அமைக்கப்படும்
சென்னை-பெங்களூர் தொழில்துறை காரிடார் அமைக்கத் திட்டம்
இதை தமிழகம், ஆந்திரா, கர்நாடக அரசுகள் இணைந்து அமைக்கும்
வீட்டுக் கடன் பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் கூடுதல் வரி விலக்கு
முதல் வீடு வாங்குவோருக்கு, ரூ. 25 லட்சம் வரை வங்கிக் கடன் வாங்குவோருக்கு இந்த வரி விலக்கு
அடிப்படைக் கட்டமைப்பில் முதலீட்டை அதிகரிக்க வரியில்லா பத்திரங்கள் வெளியிடப்படும்
தேசிய நெடுஞ்சாலைகள் சாலைகள் அமைக்கும் பணியில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க தனி வாரியம்
அடிப்படைக் கட்டமைப்பில் தனியார் முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை
வட கிழக்கு மாநிலங்களில் சாலைகள் அமைத்து மியான்மாருடன் இணைக்க நடவடிக்கை
இந்தத் திட்டத்தில் உலக வங்கி முதலீடு ஊக்குவிக்கப்படும்
முதலீடுகள் தான் நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய முதுகெலும்பு
அடிப்படைக் கட்டமைப்புக்கு ரூ. 55 லட்சம் கோடி தேவை
உணவுப் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ. 10,000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு
அனைவருக்கும் வேலை திட்டத்துக்கு ரூ. 33,000 கோடி
விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ. 7 லட்சம் கோடி
ஊரக வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ. 80,000 கோடி
விவசாயத்துறைக்கு ரூ. 27,300 கோடி
நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு 10000 புதிய பஸ்கள் வாங்க 14,873 கோடி
இதில் மலைப் பகுதி மாநிலங்களுக்கு முக்கியத்துவம்
அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கு ரூ. 27,000 கோடி
குளோரைடு, புளூரைடு அதிகமுள்ள பகுதிகளில் குடிநீரை சுத்திகரிக்க ரூ. 1400 கோடி
மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ. 13,000 கோடி
குழந்தைகள், நலத் திட்டங்களுக்கு ரூ. 17,000 கோடி
மனித வளத்துறைக்கான ஒதுக்கீடு 17 சதவீதம் அதிகரிப்பு
குடிநீர் திட்டப் பணிகளுக்கு ரூ. 15620 கோடி
மனிதவளத்துறைக்கு ரூ. 65,000 கோடி
நாலந்தா பல்கலைக்கழகத்தை மேம்படுத்த நடவடிக்கை
அரசின் செலவுகள் ரூ. 16.65 லட்சம் கோடியாக இருக்கும்
திட்டச் செலவுகள் ரூ. 5.35 லட்சம் கோடியாக இருக்கும்
சிறுபான்மையினர் நலனுக்கு ரூ. 3,000 கோடி ஒதுக்கீடு
பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர், தலித்கள் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம்
தலித்கள் மேம்பாட்டுக்கு ரூ. 42561 கோடி ஒதுக்கீடு
பழங்குடியினருக்கு ரூ. 24598 கோடி ஒதுக்கீடு
இது கடந்த ஆண்டை விட 12.5 சதவீதம் அதிகம்
2013-14ம் ஆண்டில் திட்டச் செலவுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்
பண வீக்கத்தை 4% குறைத்துள்ளோம்
இளைஞர்களுக்கு உதவும் பட்ஜெட்டாக இது இருக்கும்
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பட்ஜெட் இருக்கும்
அன்னிய முதலீடுகளை நிராகரிக்கும் நிலையில் இந்தியா இல்லை
2010ம் ஆண்டுக்குப் பின் நாட்டின் வளர்ச்சி தேங்கிவிட்டது
நிதிப் பற்றாக்குறையை மனதில் வைத்து செலவுகளைக் குறைத்தோம்
அதன் பலன்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன
உணவு பணவீக்கம் கவலை தருகிறது
பருப்பு-எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறைவே பணவீக்கத்துக்கு முக்கிய காரணம்
அரசின் செலவீனங்களை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்
அன்னிய முதலீடுகள் அவசியம் தான். ஆனால், நிலையான முதலீடுகளே வரவேற்கத்தக்கவை
நடப்புக் கணக்கு பற்றாக்குறை தான் எனது பெரிய கவலை
தங்கம் மீதான நமது மோகம், பெட்ரோலிய-நிலக்கரி இறக்குமதியால் அன்னிய செலாவணி கரைகிறது
2013-14ல் உலக நாடுகளில் சீனா மட்டுமே இந்தியாவை விட அதிக வளர்ச்சி அடையும்
இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து கவலைகள் தேவையில்லை
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே எனது மந்திரம்
2013-14ல் உலக நாடுகளில் சீனா, இந்தேனேஷியா மட்டுமே இந்தியாவை விட அதிக வளர்ச்சி அடையும்

பாலச்சந்திரனை கொல்ல கோத்தபயாவுக்கு ஐடியா கொடுத்த கருணா: சேனல் 4 இயக்குனர் பேட்டி

லண்டன்: அம்மாவும், அக்காவும் எங்கே இருக்கிறார்கள் என்று விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனிடம் இலங்கை ராணுவம் விசாரித்ததாக சேனல் 4 தொலைக்காட்சி இயக்குனர் கெல்லம் மெக்ரே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின்போது நடந்த படுகொலைகள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை சேனல் 4 வெளியிட்டது. இந்நிலையில் அத்தொலைக்காட்சி அண்மையில் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டது.
இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பான நோ பயர் ஜோன் வீடியோவை தயாரித்த சேனல் 4 தொலைக்காட்சி இயக்குனர் கெல்லம் மெக்ரே அளித்த பேட்டி வருமாறு,



 Sri Lankan Army Quizzes Balachandran About His Mom Sist
கேள்வி: பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படங்களை எடுத்தது யார்?
பதில்: பாலச்சந்திரனின் புகைப்படங்கள் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டவை. அந்த வீடியோ 19-5-2009 அன்று எடுக்கப்பட்டது. இலங்கை ராணுவ படைகளிலேயே 53ம் பிரிவு படை தான் மிகவும் கொடூரமானது, கொஞ்சமும் இரக்கமில்லாதது. அந்த படை தான் பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை எதிர்கொண்டது.
இவை எல்லாம் அந்த வீடியோக்களை எடுத்த 2 சிங்களப்படை வீரர்கள் கூறியது. அந்த 2 பேரும் 53ம் பிரிவு படையைச் சேர்ந்தவர்கள். போர் முடியும் வரை அங்கிருந்துவிட்டு அதன் பிறகு தப்பித்து வந்தவர்கள். அனைத்து வீடியோக்களையும் அவர்கள் தங்கள் செல்போனில் எடுத்தனர். போர் நடக்கும் இடத்தில் புகைப்படமோ, வீடியோவோ எடுக்க அனுமதி கிடையாது. இவை எல்லாம் ரகசியமாக எடுக்கப்பட்டவை.
இறுதிக் கட்டப்போர் நடந்த முள்ளிவாய்க்கால் ஒரு கிலோ மீட்டர் சதுர பரப்பளவு கொண்ட சிறிய பகுதி. அங்கு தான் மக்களை கொன்று குவித்து போரை முடித்துள்ளனர். 18-5-2009ம் அன்று போர் தீவிரமடைந்தபோது அங்கிருந்த மரங்களும், வாகனங்களும் ராணுவத்தால் கொளுத்தப்பட்டன. அப்போது பாலச்சந்திரன் தனது மெய்க்காப்பாளர் 4 பேருடன் இரவு முழுவதும் பதுங்கு குழியில் இருந்துள்ளார். மறுநாள் காலை வேறு வழியின்றி மெய்க்காப்பாளர்களின் முடிவுப்படி பாலச்சந்திரன் 53ம் பிரிவு படையிடம் சரண் அடைந்தார்.
மே 19ம் தேதி காலை 7.30 மணிக்கு அவர் சரணடைந்தார். உடனே அவரை அவரது மெய்க்காப்பாளர்களிடம் இருந்து பிரித்துவிட்டனர். சரண் அடைந்தவர்களின் விவரத்தை அங்கு பணியில் இருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன கோத்தபயா ராஜபக்சேவுக்கு தெரிவித்துள்ளார். அவர் இதை கருணாவிடம் கூறியிருக்கிறார். அதற்கு கருணா, அந்த பையனை உயிரோடு விட்டால் நமக்கு தான் பிரச்சனை. அவன் மைனர் என்பதால் சட்டப்படி அவனை தண்டிக்க முடியாது. அவன் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துவிட்டால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அடுத்த தலைவராகக் கூட ஆகிவிடலாம். அதனால் பிறரைப் போன்று அவனையும் கொன்றுவிடலாம் என்று கோத்தபயாவுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இதையடுத்து 53ம் படைக்கு உத்தரவு கொடுக்கப்பட்டு அவர்கள் காலை 9.30 மணிக்கு பாலச்சந்திரன் அருகே துப்பாக்கியை வைத்து அவரை 5 முறை சுட்டனர். யாரைக் கொன்றாலும் அப்படையினர் தடம் தெரியாமல் எரித்துவிடுவார்கள். அதனால் பாலச்சந்திரனையும் தூக்கிச் சென்றனர். பாலச்சந்திரன் சரண் அடைந்தபோதும், சுட்டுக் கொல்லப்பட்ட போதும் எடுக்கப்பட்ட வீடியோக்கள் தான் தற்போது வெளியிடப்பட்டன.
கேள்வி: பாலச்சந்திரனிடம் ஏதாவது விசாரணை நடத்தப்பட்டதா?
பதில்: பாலச்சந்திரனிடம் அவரது அம்மா மற்றும் அக்கா இருக்குமிடம் பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அவர், தப்பிக்கும்போது அவர்கள் ஒரு குழுவாகும், நாங்கள் ஒரு குழுவாகவும் சென்றபோது அம்மாவை காணவில்லை. அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். இது தவிர அவரிடம் வேறு எதுவும் கேட்கவில்லை. துப்பாக்கியை அவர் அருகில் கொண்டு வந்தபோது கூட தன்னைத் தான் சுட்டுக் கொல்லப் போகிறார்கள் என்று அவருக்கு புரியவில்லை.
கேள்வி: உங்களின் வீடியோ பொய் என்று இலங்கை அரசு கூறியுள்ளதே?
பதில்: செல்போனில் இருந்த வீடியோவை நான் பலமுறை பார்த்து அதன் உண்மை தன்மையை அறிந்த பிறகே ஆவணப்படம் எடுத்தோம். அந்த வீடியோவை இங்கிலாந்தில் ஆய்வு செய்தோம். அதில் இருப்பது அனைத்தும் உண்மை, உண்மை, உண்மை. இப்போது கூட இலங்கையில் உள்ள தமிழர்கள் உணவு, உடை, நீரின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இலங்கை அரசு உதவுவது இல்லை என்றார்.

Wednesday, 27 February 2013

புதுவையில் எடுக்கப்பட்ட லைப் ஆப் பைக்கு 4 ஆஸ்கர் விருதுகள்

லாஸ் ஏஞ்சல்ஸ்: புதுவையில் எடுக்கப்பட்ட லைப் ஆப் பை படத்திற்கு 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன.
2013ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் புதுவையில் எடுக்கப்பட்ட லைப் ஆப் பைக்கு சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவு மற்று சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் ஆகிய 4 பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளது.
லைப் ஆப் பை படத்தின் பெரும்பாலான காட்சிகள் புதுவையில் படமாக்கப்பட்டன. படத்தின் முதல் ட்ரெய்லர் கூட சென்னையில் தான் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


லைப் ஆப் பைக்கு 4 ஆஸ்கர் விருதுகள்

லைப் ஆப் பை படத்தை எடுத்த ஆங் லீக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. சிறந்த இசைக்காக லைப் ஆப் பை இசையமைப்பாளர் மைக்கேல் டான்னாவுக்கு விருது கிடைத்துள்ளது. மேலும் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் பிரிவிலும் லைப் ஆப் பை விருதுகளை அள்ளியது.


2வது முறையாக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர்

தைவானைச் சேர்ந்த ஆங் லீ கடந்த 2005ம் ஆண்டு புரோக்பேக் மவுன்டெய்ன் என்ற படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது பெற்றார். அதற்கு முன்பு 2000ம் ஆண்டில் கிரவுச்சிங் டைகர், ஹிட்டன் டிராகன் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார்.

Tuesday, 5 February 2013

விஸ்வரூபம் இரண்டாம் பாகம் விரைவில்... தலைப்பு 'மூ'!

விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகத்தை 'மூ' என்ற தலைப்பில் வெளியிடப் போகிறாராம் கமல்ஹாஸன்ய
விஸ்வரூபம் பல்வேறு சிக்கல்களைக் கடந்து வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கு பட்ஜெட் ரூ 100 கோடி என கமல் கூறிவருகிறார்.


Kamal Starts Campaign Moo
ஆனால் உண்மை வேறு. விஸ்வரூபத்தின் அனைத்துப் பணிகளும் கடந்த மே மாதத்திலேயே முடிந்துவிட்டதாக கமல் முன்பு தெரிவித்திருந்தார். அதே மாதத்தில் நடந்த கேன்ஸ் பட விழாவுக்குக் கூட அனுப்பியதாகக் கூறினார்கள்.
ஆனால் அதன்பிறகு கிட்டத்தட்ட 6 மாதங்கள் கமல் செய்து கொண்டிருந்த வேலை, விஸ்வரூபத்தின் இரண்டாம் பகுதியை எடுத்ததுதான். இன்னும் இரண்டு வார பணிகள்தான் இந்த இரண்டாம் பாகத்துக்கு பாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆக, இந்த 100 கோடி என்பது ஒரு படத்துக்கான பட்ஜெட் அல்ல!!
இந்த நிலையில், தான் விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருவதை கமலே ஒருபேட்டியில் ஒப்புக் கொண்டார். மேலும் அந்தப் படத்துக்கு மூ என்ற தலைப்பைப் பதிவு செய்யவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த இரண்டாம் பாகத்தில் கமல் மூன்று வேடங்களில் நடித்துள்ளாராம். அதைக் குறிப்பிடும் வகையில்தான் மூ என்று தலைப்பு வைக்கிறாராம்.
தீவிரவாதி முல்லா உமர் அமெரிக்காவிலிருந்து தப்புவதுபோல் ‘விஸ்வரூபம்' படத்தை கமல் முடித்துள்ளார். இரண்டாம் பகுதியில் முல்லா உமர் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட திட்டமிடுவது போன்றும் அதனை கமல் முறியடிப்பது போன்றும் திரைக்கதை உருவாகியுள்ளது. இந்த படத்தை ஆங்கிலத்திலும் ரிலீஸ் செய்யப் போகிறாராம்.