லாஸ் ஏஞ்சல்ஸ்: புதுவையில் எடுக்கப்பட்ட லைப் ஆப் பை படத்திற்கு 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன.
2013ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் புதுவையில் எடுக்கப்பட்ட லைப் ஆப் பைக்கு சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவு மற்று சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் ஆகிய 4 பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளது.
லைப் ஆப் பை படத்தின் பெரும்பாலான காட்சிகள் புதுவையில் படமாக்கப்பட்டன. படத்தின் முதல் ட்ரெய்லர் கூட சென்னையில் தான் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

லைப் ஆப் பைக்கு 4 ஆஸ்கர் விருதுகள்
லைப்
ஆப் பை படத்தை எடுத்த ஆங் லீக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது
கிடைத்துள்ளது. சிறந்த இசைக்காக லைப் ஆப் பை இசையமைப்பாளர் மைக்கேல்
டான்னாவுக்கு விருது கிடைத்துள்ளது. மேலும் சிறந்த ஒளிப்பதிவு மற்றும்
விஷுவல் எபெக்ட்ஸ் பிரிவிலும் லைப் ஆப் பை விருதுகளை அள்ளியது.
2வது முறையாக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர்
தைவானைச்
சேர்ந்த ஆங் லீ கடந்த 2005ம் ஆண்டு புரோக்பேக் மவுன்டெய்ன் என்ற
படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது பெற்றார். அதற்கு முன்பு
2000ம் ஆண்டில் கிரவுச்சிங் டைகர், ஹிட்டன் டிராகன் படத்திற்காக சிறந்த
இயக்குனருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் அவர்
இந்த ஆண்டு இரண்டாவது முறையாக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப்
பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment