Thursday, 17 January 2013

இந்திய மண்ணில் கண்ணிவெடிகளை புதைத்த பாகி்ஸ்தான்- ஆதாரங்களை வெளிட்டது ராணுவம்!!!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் ஊடுருவித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் இந்திய மண்ணில் நிலக் கண்ணிவெடிகளையும் புதைத்து வைத்திருக்கிறது. இதற்கான ஆதாரங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.



 1 Pak Soldier Killed Indian Army Toll Rises
தொடரும் பதிலடியும் பலியும்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஜனவரி 6-ந் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தந்த பதிலடியில் ஒரு பாகிஸ்தான் ராணுவ வீரர் கொல்லப்பட்டார். பின்னர் ஜனவரி 8-ந் தேதியன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி இந்திய பகுதிக்குள் ஊடுருவி இரு இந்திய ராணுவ வீரர்களை மிகக் கோரமான முறையில் படுகொலை செய்தனர். மேலும் ஹேம்ராஜ் என்ற ராணுவ வீரரின் தலையை துண்டித்தும் எடுத்துச் சென்றனர். இதற்கு இந்தியத் தரப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் மேலும் ஒரு பாகிஸ்தான் வீரர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்த் இருநாடுகளிடையேயான உறவு விரிசலைடைந்து எல்லையில் மிகவும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் பாகிஸ்தானுடனான சுமூக உறவு இல்லை என்றும் நேற்று பிரதமர் மன்மோகன்சிங் எச்சரித்திருந்தார். பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியத் தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி நேற்று இரவு 8. 15 மணியளவில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானின் புதிய தாக்குதலுக்கு இந்தியத் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் நேற்று இரவு 10 மணியளவில் ஒரு பாகிஸ்தான் வீரர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்த ஜனவரி மாதம் மட்டும் நடந்த மோதல்களில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
கண்ணிவெடிகள்
இதனிடையே எல்லைக் கட்ட்டுப்பாட்டுப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் வேலிகளை ஊடறுத்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி வருவது வாடிக்கையான ஒன்று. இதற்கானவே பல முறை இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இந்திய ராணுவத்தினரின் கவனத்தை திசை திருப்புவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறது பாகிஸ்தான். அண்மையில்கூட வேலிகளைத் தகர்க்க கண்ணிவெடிகளை தீவிரவாதிகள் உதவியுடன் பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் புதைத்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இப்பொழுது இந்தியப் பகுதியிலேயே கண்ணிவெடிகளை பாகிஸ்தான் ராணுவம் புதைத்து வைத்திருப்பதாக ஆதாரப்பூர்வமான செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கான ஆதாரங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர் பதற்றம் உருவாக்கம்
இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஆசியக் கூட்டமைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி பேசுகையில், இந்திய பிரதமரின் கருத்துகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. நாங்கள் எந்தப் போர் பதற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கடந்த 60 ஆண்டு காலமாக எங்கள் நாட்டுக்கு வெளியில் இருந்து போர் பதற்றங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அதன் பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 பேர் பலியானால் இந்தியப் பகுதியிலும் இருவர் பலியாகின்றனர். ஆனால் பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டி போர் பதற்றத்தை உருவாக்குகின்றனர் என்றார் அவர்.

'தல' கூட நடிக்க விஜய் ரெடி: ஸ்ரிகிப்ட் இருக்காப்பா?

சென்னை: நடிகர் விஜய் நல்ல கதை அமைந்தால் அஜீத் குமாருடன் சேர்ந்து நடிக்க தயார் என்று தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டில் அஜீத் குமாரும், விஜயும் பெரிய நடிகர்கள். ஒரு காலத்தில் எதிரிகளாக இருந்த அவர்களும் சரி, அவர்களின் ரசிகர்களும் சரி தற்போது ராசியாகிவிட்டார்கள். ஏதாவது விழாக்களில் அஜீத், விஜய் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளிவந்தால் அதைப் பார்த்து ரசிகர்கள் பூரித்துப் போவார்கள்.


புகைப்படத்திற்கே இவ்வளவு வரவேற்பு என்றால் அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தார்கள் என்றால் எப்படி இருக்கும். நினைத்துப் பார்க்கவே சூப்பராக இருக்கிறது அல்லவா. ஆனால் அவர்கள் இருவரும் என்ன சொல்வார்கள் என்று தானே நினைக்கிறீர்கள். இது குறித்து விஜய் பதில் கொடுத்துவிட்டார்.

'தலைவா' அரசியல் படமா? விஜய் விளக்கம்

சென்னை: தான் நடிக்கும் தலைவா அரசியல் படமல்ல என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு தலைவா என்று பெயர் வைத்து போஸ்டர்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் விஜய் கையசைக்கும் போஸ்டரைப் பார்க்கையில் ஏதோ அரசியல் படம் என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் தலைவா படத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறிய விஜய் கதை குறித்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.


Is Thalaivaa Political Movie
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சுனில் சந்திரபிரகாஷ் ஜெயின் கூறுகையில்,
தலைவா என்ற தலைப்பு படத்தின் கதைக்கும், விஜயின் இமேஜுக்கும் மகிவும் பொருத்தமாக இருந்ததால் அதை தேர்வு செய்துள்ளோம். மேலும் போஸ்டர்களும் அதன்படி தான் டிசைன் செய்யப்பட்டன என்றார்.
விஜய் எப்பொழுது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் அவர் அரசியலுக்கு நிச்சயம் வருவார் ஆனால் அதற்கு காலம் ஆகும் என்று அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

Thursday, 10 January 2013

vikadan viruthukal..

'கண்ணா க‌‌ளி தின்ன ஆசையா' - சந்தானம் மீது கு‌வியு‌ம் புகார்க‌ள்

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் கதை எ‌‌ன்னுடையதஎ‌ன்றஇய‌க்குனரு‌ம், நடிகருமாபா‌க்‌‌கியரா‌ஜபுகா‌ரகூ‌றி‌யிரு‌ந்த ‌நிலை‌யி‌ல், த‌ற்போது, இ‌ந்பட‌த்த‌ி‌னகதஎ‌ன்னுடையதஎ‌ன்று‌மநடிக‌ரச‌ந்தான‌ம் ‌மீதநடவடி‌க்கஎ‌டு‌க்க‌ககோ‌ரியு‌ம் உதவி இயக்குனர் ஒருவ‌போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சி‌ரி‌ப்பநடிக‌ரச‌ந்தான‌மதயா‌ரி‌த்தநடி‌த்து‌ள்ள 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற புதிய படம் பொங்கலுக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ள ‌நிலை‌யி‌லபடத்தின் கதைக்கு போட்டா போட்டி எழுந்துள்ளது.



'க‌ண்ணல‌ட்டு ‌தி‌ன்ஆசையா' படத்தின் கதை தன்னுடைய கதைதான் என்றும், தனக்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் இய‌க்குன‌ரஇய‌க்குன‌ரபாக்கியராஜ் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

இது ஒரு பக்கம் பரபரப்பாக பேசப்படும் நிலையில், நவீன்சுந்தர் என்ற சினிமா உதவி இயக்குனரும், 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் கதை தன்னுடையது என்று உரிமை கொண்டாடி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்‌து‌ள்ளா‌ர்.

அ‌ந்புகா‌ரமனு‌வி‌ல், நான் கடந்த 20 ஆண்டுகளாக சினிமா உலகில், பல முன்னணி இயக்குனர்களிடம், உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளேன். அன்புள்ள சிம்பு என்ற கதையை நான் எழுதினேன். நடிகர் சிம்புவை கவுரவ வேடத்தில் நடிக்க வைத்து, இந்த கதையை படம் எடுக்க திட்டமிட்டேன்.

பிரபல நகைச்சுவை நடிகர் சந்தானத்திடம் இந்த கதையை சொன்னேன். அவரும் கதையை கேட்டுவிட்டு, நன்றாக இருப்பதாகவும், நடிகர் சிம்புவிடம், படத்தில் நடிக்க ஒப்புதல் வாங்கி தருவதாகவும் கூறினார்.

ஆனால் நான் சொன்ன கதை இப்போது, 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. எனது கதையை திருடி அந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சந்தானம் என்னை ஏமாற்றிவிட்டார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டு‌எ‌ன்றமனு‌வி‌லகூ‌றியு‌ள்ளா‌ர்.

உலகின் முதல் இரயில் சுரங்க பாதைக்கு வயது 150!

உலகிலேயே முதன்முதலாக அமைக்கப்பட்ட சுரங்க இரயில் பாதைக்கு இன்றுடன் 150 வயது ஆகிறது.



உலகின் முதல் இரயில் சுரங்க பாதை லண்டனில் அமைந்துள்ளது.1863ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 தேதி துவங்கப்பட்ட இந்த இரயில் பாதைக்கு இன்று 150 வயதாகின்றது. ஆரம்பத்தில் மிகக் குறைந்த தூரத்தில் உருவாக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை படிப்படியாக விரிவடைந்து இன்று 402 கி.மீட்டர் நீளத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

லண்டன் டியூப் என்றழைக்கப்படும் இந்த சுரங்கப் பாதையின் வழியாக ஆண்டொன்றுக்கு லட்சம் கோடி பேர் பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

8 வது மாடியில் இருந்து விழுந்தும் பாதிப்பில்லை! எமனைப் பார்த்து சிரித்த சிறுவன்!!

 Ukraine 3 Year Old Boy Falls Eight Storeys
உக்ரைன்: உக்ரைன் நாட்டில் எட்டாவது மாடியில் இருந்து விழுந்தும் எந்த வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பியுள்ளான் 3 வயது சிறுவன்.
அந்த அதிசய சிறுவன் வடகிழக்கு உக்ரைன் நாட்டில் உக்ரைனியன் நகரில் வசித்து வருகிறான். எட்டாவது மாடியில் தனது தயாருடன் வசித்து வரும் அந்த சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த போது வீட்டின் ஜன்னலை திறந்து எதிர்பாராத விதமாக 8வது மாடியில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்தான்.
அவனது அதிர்ஷ்டம், ஜன்னலுக்கு நேர்கீழே, அவன் விழுந்த இடத்தில், மிருதுவான பனிக்கட்டி குவியல் இருந்தது. இதனால் காயங்களுடன் உயிரிழக்காமல், அந்த சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். சில
சிராய்ப்புகளுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் அவனது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது போன்ற உயரமான கட்டிடங்களில் இருந்து கீழே விழுந்த சிலர், அரிதாக உயிர் பிழைத்த சம்பவங்கள் இதற்கு முன்னரும் நிகழ்ந்துள்ளன.
2008-ம் ஆண்டு, அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில், ஜன்னல் கண்ணாடியை துடைக்கும்போது 47வது மாடியில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிர் பிழைத்தார்.



இதேபோல் சீனாவில் 2009-ம் ஆண்டு 27வது மாடியின் ஜன்னல் வழியே கீழே விழுந்த 29வயது சீனப்பெண் ஒருவர் உயிர் தப்பினார்.
2010-ம் ஆண்டு 20வது மாடி ஜன்னல் வழியே தவறி விழுந்த 10 வயது சிறுவன், கீழே நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்ததில் அவன் காயங்களுடன் தப்பினான் என்பது குறிப்பிடத்தக்கது.



ஆயுசு இருந்தால் 60 வது மாடியில் இருந்தும் தப்பியவர்கள் இருக்கின்றனர். அதேசமயம் ஆயுசு முடிந்தால் புல் தடுக்கி விழுந்து இறந்தவர்களும் பலர் உண்டு என்பதுதான் உண்மை.

விஜய்க்கு ஏற்ற டான்ஸ் ஜோடி கிடைச்சாச்சு

சென்னை: விஜய்க்கு ஏற்ற ஜோடி த்ரிஷா என்றாலும், அவருக்கு ஏற்ற டான்ஸ் ஜோடி காஜல் அகர்வால் தான்.
விஜய் சூப்பராக டான்ஸ் ஆடுவார் என்று நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. பிரபுதேவா இயக்கிய இந்தி படமான ரவுடி ரத்தாரில் விஜய் ஒரு பாடலில் அதுவும் சில ஸ்டெப்ஸ் தான் போட்டிருப்பார். அதற்கே படத்தின் நாயகன் அக்ஷய் குமார் அதிர்ந்துவிட்டார். இவருக்கு என்ன 17 வயதா என்று கேட்டுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
விஜய் நச்சுன்னு ஆடினாலும் படத்தில் அவருடன் ஆடும் நாயகிகளும் அவருக்கு இணையாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் விஜய்க்கு இணையாக டான்ஸ் ஆடிய நாயகி என்றால் அது சிம்ரன் மட்டுமே. இந்நிலையில் விஜய்க்கு ஏற்ற புதிய டான்ஸ் ஜோடி கிடைத்துள்ள




விஜய்க்கு இணையாக ஆடிய சிம்ரன்




விஜயின் வேகத்திற்கு ஈடு கொடுத்து சூப்பராக டான்ஸ் ஆடிய நாயகி சிம்ரன் தான். அவர்கள் இருவரும் சேர்ந்து ஆடிய பாடல்களை எப்பொழுதுமே பார்க்கலாம். அவ்வளவு நன்றாக இருக்கும்.

அப்போ த்ரிஷா?




த்ரிஷாவை விஜய்க்கு ஏற்ற டான்ஸ் ஜோடி என்று கூற முடியாது. இருவரையும் சேர்ந்து பார்த்தால் நன்றாக இருக்கும்.


சிம்ரனை அடுத்து காஜல்






சிம்ரன் அம்மா வேடத்திற்கு சென்ற பிறகு விஜயுடன் எத்தனையோ ஹீரோயின்கள் நடித்துவிட்டனர். ஆனால் அவருக்கு ஈடுகொடுத்து ஆடும் அளவுக்கு யாரும் இல்லை. இந்நிலையில் துப்பாக்கி படத்திற்காக விஜயுடன் ஜோடி சேர்ந்த காஜல் அவருக்கு இணையாக டான்ஸும் ஆடுகிறார். பல ஆண்டுகள் கழித்து விஜய்க்கு ஏற்ற டான்ஸ் ஜோடி கிடைத்துள்ளது. விஜய்-காஜல் ஜோடி பார்ப்பதற்கும் நன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Tuesday, 8 January 2013

என் கதையை விற்கும் உரிமையை பாலச்சந்தர் மகளுக்கு யார் கொடுத்தது? - கே பாக்யராஜ்

சென்னை: இன்று போய் நாளை வா என்னுடைய கதை, எனது படைப்பு என்பது தமிழ் சினிமாவில் தெரியாதவர்களே கிடையாது. அப்படி இருந்தும் என் கதையை தனக்கு சொந்தமானது என பாலச்சந்தர் மகள் புஷ்பா கந்தசாமி விற்றிருப்பதை என்னவென்பது, என்கிறார் வேதனையுடன் இயக்குநர் கே பாக்யராஜ். திரைக்கதை மன்னன் என்றும் இயக்குநர் திலகம் என்று புகழப்படும் கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் இன்று போய் நாளை வா. இந்தப் படத்தின் கதையை பாக்யராஜுக்கே தெரியாமல் விற்று பெரும் பணம் சம்பாதித்துள்ளார் புஷ்பா கந்தசாமி. அந்தக் கதையை சத்தமில்லாமல் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று படமாக எடுத்து, பொங்கலுக்கு அவசர அவசரமாக வெளியிடத் தயாரானபோது, கையும் களவுமாக மாட்டிக் கொண்டனர் தயாரிப்பாளர்கள் ராம நாராயணனும் சந்தானமும். 
Bagyaraj Alleged K Balachander Daughter
 
 
இந்தக் கதைத் திருட்டு குறித்து போலீசுக்கு 3 பக்க புகார் கடிதம் அனுப்பியுள்ள பாக்யராஜ், படத்தைத் தடை செய்ய வழக்குத் தொடரவும் தயாராகி வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, தன் வேதனையை கொட்டித் தீர்த்துவிட்டார். "தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவில் உள்ள அனைவருக்குமே தெரியும் எனது கதைகள் பற்றி. யாராக இருந்தாலும் என் கதையை உரிய முறையில் கேட்டு படம் பண்ணி ஜெயித்திருக்கிறார்கள். இந்தியில், தெலுங்கில் இன்று வரை அப்படித்தான் நடக்கிறது. ஆனால் இங்கே தமிழ் சினிமாவில் நடந்திருக்கும் அநியாயம் சொல்ல முடியாதது. ஒரு படைப்பாளியை இப்படியா கேவலப்படுத்துவார்கள்? கதைக்கு சொந்தக்காரன் நான். திரைக்கதை, வசனம் அனைத்தும் எனக்கே உரியது. இந்தக் கதையை படமாக எடுக்க புஷ்பா கந்தசாமி என்னிடம் கேட்டார். நான் தரமுடியாது என்று கூறிவிட்டேன். காரணம் என் மகனை வைத்து இந்தப் படத்தை எடுத்து அவனுக்கு ஒரு பிரேக் தர விரும்பினேன். அடுத்து ராமநாராயணன் கேட்டார். அவருக்கும் அதே பதில்தான். நான் கதையைத் தரவில்லை என்றவுடன், என் கதையின் உரிமை தன்னிடம் இருப்பதாகக் கூறி புஷ்பா கந்தசாமியும் அவரது குடும்பத்தினரும் ராமநாராயணனுக்கு விற்று பணம் பார்த்திருக்கிறார்கள். இது நியாயமா...?," என்றார்.

பாக். ராணுவத்தின் வெறி.. இந்தியாவுக்குள் ஊடுறுவி 2 வீரர்களைக் கொன்று ஒருவரின் தலையை கொய்து சென்றது

டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய வீரர்கள் இந்திய வீரர் ஒருவரின் தலையைத் துண்டித்ததுடன், மேலும் ஒரு வீரரை கொன்றுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மெந்தார் செக்டருக்குள் பாகிஸ்தானிய படை நேற்று அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. சுமார் அரை மணிநேரம் நடந்த இந்த தாக்குதலில் 13வது ராஜ்புத்தானிய ரைபில்ஸ் பிரிவைச் சேர்ந்த லான்ஸ் நைக்ஸ் ஹேம்ராஜ் மற்றும் சுதாகர் சிங் ஆகிய இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். அதில் ஒரு வீரரின் தலையை பாகிஸ்தானிய வீரர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் விட்டுச் சென்ற வீரரின் உடலும் மேசமாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் கொலைவெறித் தாக்குதல் குறித்து இந்திய ராணுவம் எந்த தகவலையும் வெளியிட விரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து நேற்று கொச்சியில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பாகிஸ்தான் ராணுவத்தினர் கூறுகையில்,
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய வீரர்கள் இந்திய வீரர் ஒருவரின் தலையைத் துண்டித்ததுடன், மேலும் ஒரு வீரரை கொன்றுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மெந்தார் செக்டருக்குள் பாகிஸ்தானிய படை நேற்று அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. சுமார் அரை மணிநேரம் நடந்த இந்த தாக்குதலில் 13வது ராஜ்புத்தானிய ரைபில்ஸ் பிரிவைச் சேர்ந்த லான்ஸ் நைக்ஸ் ஹேம்ராஜ் மற்றும் சுதாகர் சிங் ஆகிய இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். அதில் ஒரு வீரரின் தலையை பாகிஸ்தானிய வீரர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் விட்டுச் சென்ற வீரரின் உடலும் மேசமாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் கொலைவெறித் தாக்குதல் குறித்து இந்திய ராணுவம் எந்த தகவலையும் வெளியிட விரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து நேற்று கொச்சியில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பாகிஸ்தான் ராணுவத்தினர் கூறுகையில், எங்கள் ராணுவ படை இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய படை எங்கள் எல்லைக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதை உலக பார்வையில் இருந்து மறைக்க நாங்கள் அத்துமீறி நுழைந்ததாக பிரச்சாரம் செய்கிறார்கள் என்றனர்.
 Pak Troops Kill Two Jawans Behead Mutilate One Of Them
 
 
 
 எங்கள் ராணுவ படை இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய படை எங்கள் எல்லைக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதை உலக பார்வையில் இருந்து மறைக்க நாங்கள் அத்துமீறி நுழைந்ததாக பிரச்சாரம் செய்கிறார்கள் என்றனர்.

விஸ்வரூபம் ரூ. 150 கோடியை வசூலிக்காவிட்டால் அது தோல்விப் படம்... கமல் படபடப்பு பேட்டி !!!

விஸ்வரூபம் ரூ. 150 கோடியைத் தாண்டியாக வேண்டும். அப்படி இல்லை என்றால் என்னைப் பொறுத்தவரை அது தோல்விப்படம்தான். எனது முயற்சிகள் பலவீனமானவை என்பதை நான் ஒத்துக் கொள்வேன். ஆனால் முதல் வாரத்திலேயே நாங்கள் ரூ.150 கோடியைத் தாண்டி விடுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

எனது படங்களிலேயே மிகப் பெரிய அளவில் செலவு செய்யப்பட்டு, மிகவும் நேர்த்தியாக தயாராகியுள்ள படம் இது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. மேலும் நாங்கள் நிறைய சாதிக்கத் திட்டமிட்டு களம் இறங்கிப் பணியாற்றினோம். அதற்கேற்ப அருமையான டெக்னீசியன்கள் கிடைத்தார்கள். அனைவருமே சிறப்பானவர்கள். மிகச் சிறந்த அணியுடன் நான் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன்.
 
இன்னும் சாதிக்க வேண்டும் , 150 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். ஆனாலும் எனக்கு திருப்தி என்பது வரவே இல்லை. இன்னும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அதிகம் இருக்கிறது. இன்னும் கற்க வேண்டியது நிறைய உள்ளது
 
அடிப்படையில் நான் டெக்னீசியன்தான். தற்செயலாகத்தான் நடிக்க வந்து விட்டேன். எனவே எனது நடிப்பு மக்களால் விரும்பப்படவில்லை என்றால் உடனே வேறு வேலை பார்த்துக்கொண்டு போய் விடுவேன்.

எனக்கு நிச்சயம் போட்டிகள் உண்டு.எனக்கு என்றில்லை எல்லோருக்குமே உண்டு. எனக்கு 18 வயது முதல் 65 வயது வரையிலானார் பலர் போட்டியாக உள்ளனர். ஆனால் போட்டி இருப்பதுதான் ஆரோக்கியமானது. அப்போதுதானே நாம் சாதிக்க முடியும் என்றார் கமல்.
.

ரூ. 28,000 கோடி! ஜனவரி 11ல் கிளைமாக்ஸ்- தாராபுரம் கடலை வியாபாரி ராமலிங்கம்!

  
 Coimbatore Broker Tm Ramalingam How Got 28000 Cr
தாராபுரம்: இந்திய ஊடகங்களை ஒரே நாளில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் தாராபுரம் கடலை வியாபாரி ராமலிங்கம் தமது ரூ.28,000 கோடி மதிப்புள்ள அமெரிக்க பத்திரங்கள் தொடர்பாக ஜனவரி 11-ல் விவரிக்கப் போவதாக கூறியுள்ளார். ரூ.28,000 ஆயிரம் கோடி மதிப்புள்ள அமெரிக்க கடன் பத்திரங்களை வைத்துக் கொண்டு அனைவரது மண்டையைப் பிய்க்க வைத்து வருகிறார் கடலை வியாபாரி ராமலிங்கம். அவரிடம் அதிகாரிகள் கேள்விக் கணைகளால் துளைத்துப் பார்த்தாலும் அசராமல் பதிலளித்து வருகிறார். தமது லட்சிய திட்டமாக தொண்டியில் ரூ1.5 லட்சம் கோடி செலவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார் கடலை வியாபாரி ராமலிங்கம். ராமலிங்கத்தின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த டேனியல் என்பவரதுமுகவரி இருக்கிறது. இப்போது டேனியலை பிடித்து விசாரிக்க சர்வதேச போலீஸ் உதவியை நாடியுள்ளனர். இந்திய பிரமுகர் ஒருவரது ஹவாலா ஏஜெண்டாக ராமலிங்கம் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது பற்றி என்ன கேட்டாலும் ஜனவரி 11 மீண்டும் விசாரணைக்கு ஆஜராவேன்.. அதன் பிறகு உண்மைகளை சொல்லுகிறேன் என்றார். என்னவென்று

Monday, 7 January 2013

பெரும் பணம் கொடுத்து 15 வயது சிறுமியை மணந்த 90 வயது சவூதி ஷேக் தாத்தா...!

துபாய்: பெரும் பணத்தை வரதட்சணையாக கொடுத்து 15வயது சிறுமியை மணந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் 90 வயதான சவூதி அரேபியா நபர் ஒருவர். இந்த வயது முதிர்ந்த தாத்தாவுக்குக் கட்டி வைக்கப்பட்ட அந்த சிறுமி, 2 நாட்கள் பெட்ரூம் கதவை மூடிக் கொண்டு பயத்தில் வெளியே வராமலேயே இருந்துள்ளார். 
பின்னர் வீட்டிலிருந்து தப்பி தனது வீட்டுக்கு ஓடி விட்டார். சவூதி அரேபியாவில் இந்த திருமணம் பெரும் பரபரப்பையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தனது திருமணம் சட்டப்பூர்வமானதே என்று அந்த 90 வயது சவூதி அரேபிய நபர் கூறுகிறார். மேலும், அந்தச் சிறுமியை மணப்பதற்காக 17,500 டாலர் பணத்தை சிறுமியின் பெற்றோரிடம் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். 
                    அந்த சிறுமி ஏமன் நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும், சவூதியைச் சேர்ந்த தாயாருக்கும் பிறந்தவர் ஆவார். பெரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு விட்டு திருமணம் செய்து வைத்து விட்டுப் பின்னர் தற்போது மீண்டும் சிறுமியை வீட்டுக்கு அழைத்துப் போய் விட்டனர் அவரது சகோதரர்கள். இது அநீதியானது. இதை ஏற்க முடியாது. அவர்கள் மறுபடியும் எனது மனைவியைக் கொண்டு வந்து விட வேண்டும் என்றும் கொந்தளித்துள்ளார் 
 
இந்தத் தாத்தா... இந்த ஷேக் தாத்தாவின் செயலால் சவூதி அரேபியாவில் மனித உரிமை ஆர்வலர்களும், பெண்கள் நல அமைப்பினரும் கடுமையாக கொந்தளித்துக் குரல் கொடுத்து வருகின்றனர்.

சேவை வரிக்கெதிரான உண்ணாவிரதம் - இளம் நடிகர்கள், முன்னணி நடிகைகள் டிமிக்கி!!

சென்னை: 12.3 சதவீத சேவை வரிக்கு   எதிராக திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் முடிந்து போனது.

ரஜினி மட்டும் வராமல் போயிருந்தால் ரொம்ப காமெடியாகப் போயிருக்கும் என்று சொல்லும் அளவுக்குதான் இந்த உண்ணாவிரதம் இருந்தது.
சம்பளம் வாங்குவதில் தங்களை முன்னணி நடிகர் - நடிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் நடிகர்கள் பெருமளவில் வரவில்லை.





சும்மனாங்காட்டியும்...

திரையுலகின் சார்பில் எந்த போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டாலும் நடிகர் சங்க நிர்வாகிகள் முதலில் குறிவைப்பது ரஜினியைத்தான். 'ரஜினி, கமெலெல்லாம் வருவார்கள்.. வராவிட்டால்... அவ்ளோதான்' என்பது போல கெத்து காட்டுவார்கள்.
நிகழ்ச்சி நடக்கும் நாளன்று ரஜினி மட்டும் வந்திருப்பார்.
சொல்லி வைத்த மாதிரி முன்னணி நடிகர்கள் ஒருவரும் எட்டிக் கூடப் பார்க்க மாட்டார்கள். நடிகர் சங்க நிகழ்ச்சிகள் பலவற்றிலும் அடிக்கடி பார்க்கும் உண்மை இது.


விஜய்


அங்கு வந்த பிறகுதான், நடிகர் சங்க செட் பிராபர்ட்டிகளான சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர், ராதிகா, சத்யப்ரியா போன்றவர்கள் மட்டுமே வந்திருப்பது தெரிந்தது. முன்னனி நடிகர்களில் விஜய் மற்றும் சூர்யா மட்டுமே வந்திருந்தனர். கார்த்தியும் ஆஜராகியிருந்தார்.
 
அஜீத், தனுஷ், சிம்பு உள்ளிட்டோர் எங்கே
 
 
அஜீத், தனுஷ், சிம்பு உள்ளிட்டோர் எங்கே? நடிகர் அஜீத், சிம்பு, தனுஷ், ஜீவா, ஆர்யா உள்பட இளம் நடிகர்கள் ஒருவர் கூட இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை. இவர்களில் சிம்பு நடிகர் சங்க நிர்வாகிகளில் ஒருவர். படப்பிடிப்பு, வெளியூர் என எந்த பொய்யும் சொல்ல முடியாது இவர்கள். காரணம், அனைத்துப் படப்பிடிப்புகளும் இன்று ரத்து செய்யப்பட்டுவிட்டன.
 
நடிகைகளுக்கு என்ன ஆச்சு?
 நடிகர்களிலாவது ரஜினி என்ற பெருந்தலை வந்துவிட்டதால், மற்றவர்கள் வராதது தெரியவில்லை. ஆனால் நடிகைகளில் இன்றைக்கு முன்னணியில் உள்ள ஒருவர் கூட வரவில்லை. வந்த ஒரே இளம் நடிகை மட்டும்தான். மற்றபடி வடிவுக்கரசி, மும்தாஜ், ஜெயசித்ரா, குட்டி பத்மினி என இன்றைய ரசிகர்களுக்கு தெரியாத பழைய நடிகைகள்தான் ஆங்காங்கே தெரிந்தனர்.
 
என்ன செய்வார் சரத்குமார்? 
இந்த முறை உண்ணாவிரதத்துக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம். காரணம், இது ஒவ்வொரு நடிகர் நடிகைக்கும் நடிகர் சங்கம் நடத்தும் போராட்டம் என்று சரத்குமார் சொல்லியிருந்தார். என்ன செய்யப் போகிறாரோ!

 

 
 


 


சித்ரவதை செய்த நேபாள ராணுவ தளபதி- இங்கிலாந்தில் சிக்கினார்

லண்டன்: நேபாளத்தில் மாவோயிஸ்டுகளுடான உள்நாட்டுப் போரில் அப்பாவி பொதுமக்களைச் சித்திரவதை செய்ததாக குற்றம்சாட்டப்படும் ராணுவத் தளபதி லாமாவை இங்கிலாந்து அரசு கைது செய்துள்ளது.
நேபாளத்தில் மாவோயிஸ்ட்கள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்தபோது அவர்களை ஒடுக்க அந்நாட்டு ராணுவம் நடவடிக்கை எடுத்தது. அந்தக் காலகட்டத்தில் சந்தேகத்துக்கு இடமானவர்கள் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டனர். 2005ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட நபர்களைச் சித்திரவதை செய்ததாக நேபாள ராணுவ உயரதிகாரி லாமா(46) மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவர் தற்போது தென் சூடானில் ஐ.நா. அமைதிப் படையில் சேவையாற்றி வருகிறார். அவர் அண்மையில் இங்கிலாந்தில் தங்கியிருந்த போது, பாதிக்கப்பட்டோரில் ஒருவரான ராவத் அந்நாட்டு போலீசிடம் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்தின் செயின்ட் லெனார்ட்ஸ் ஆன் சீ நகரில் தங்கியிருந்த லாமாவைக் அந்நாட்டுப் போலீசார் கைது செய்தனர்.
இங்கிலாந்து அரசின் இந்நடவடிக்கையை லண்டனை அடிப்படையாகக் கொண்ட ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை அமைப்பு வரவேற்றுள்ளது. இதனிடையே, ராணுவ அதிகாரி லாமா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக காத்மாண்டில் உள்ள இங்கிலாந்து தூதரை நேபாள அரசு சம்மன் அனுப்பி வரவழைத்தது. மேலும் தளபதி லாமாவை உடனடியாக விடுதலை செய்யுமாறும் நேபாளம் வலியுறுத்தியுள்ளது.

இந்தியா- பாக். கிரிக்கெட் போட்டியில் கண்டிப்பாக மேட்ச் பிக்ஸிங்: இங்கிலாந்து முன்னாள் வீரர் கருத்து

 Ind Vs Pak 3rd Odi Was Fixed Alleges Paul Nixon
டெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கண்டிப்பாக மேட்ச் பிக்ஸிங் நடந்துள்ளது என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பால்நிக்சன் புகார் தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான நேற்றைய போட்டி யாரும் எதிர்பாராத வகையில் கடைசி ஓவர்கள் மிகவும் பரபரப்பாக இருந்தது. பாகிஸ்தான் வெற்றி பெறக் கூடிய நிலையில்தான் இருந்தது. ஆனால் கடைசி சில ஓவர்களில் வேண்டுமென்றே பாகிஸ்தான் விளையாடியதாகவே அனைவரும் எளிதாக யூகிக்கும் வகையில் ஆட்டம் இருந்தது. நேற்றைய போட்டியில் நிச்சயம் மேட்ச் பிக்ஸிங்குக்கு இடம் இருக்கிறது என்றே சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பால்நிக்சன், இந்த ஆட்டத்தை பார்க்கும்போது பாகிஸ்தான் கடைசி நேரத்தில் தோற்கும் வகையில் ஆடியது நன்றாக தெரிந்தது. இந்தியாவின் 12-வது வீரராக மேட்ச் பிக்ஸிங் தரகர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று தட்டிவிட்டு பற்ற வைத்திருக்கிறார்.
பால்நிக்சனின் இந்தக் கருத்தால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இதே நிக்சன் கடந்த ஆண்டு எழுதிய புத்தகத்தில், 20 ஓவர் போட்டி தொடர்பாக இந்திய மேட்ச் பிக்ஸிங் தரகர் ஒருவர் 5 மில்லியன் டாலர் தமக்கு தர முன்வந்ததாகக் கூறி சர்ச்சையைக் கிளப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோஹ்லி நல்லா விளையாடுங்க, கடிதம் எழுதி வைத்துவிட்டு பிஇ மாணவி தூக்கு போட்டு தற்கொலை

 Bhopal Girl Ends Life Asks Virat Kohli To Play Well
போபால்: போபாலில் பிஇ முதலாம் ஆண்டு படித்த 18 வயது மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தான் சாகும் முன்பு எழுதிய கடிதத்தில் கிரிக்கெட் வீரர் விராத் ஜோஹ்லி நன்றாக விளையாட வேண்டும் என்று எழுதி வைத்துள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள பினா பகுதியில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ முதலாம் ஆண்டு படித்து வந்த 18 வயது மாணவி கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். இந்நிலையில் அவர் சாகும் முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
நான் கோஹ்லியின் தீவிர ரசிகை. கோஹ்லி ஒரு அருமையான கிரிக்கெட் வீரர். அவர் வருங்காலத்தில் பல்வேறு சாதனைகள் படைப்பார். அவர் நன்றாக விளையாட வேண்டும். என் குடும்பத்தார் யாராவது கோஹ்லியை சந்தித்தால் நான் அவரது தீவிர ரசிகை என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று மாணவியின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளையராஜாவை அவமதிப்பதா.. எஸ்ஜே சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய பிரகாஷ்ராஜ்!

Prakash Raj Says No Isai
 
இசைஞானி இளையராஜாவை அவமதிப்பது போல காட்சிகள் இருந்ததால் இசை படத்தில் நடிக்க மறுத்து வெளியேறிவிட்டார் பிரகாஷ் ராஜ்.
இளையராஜாவுடன் சமீப காலமாக மிக நெருக்கமாக இருந்து வருகிறார் பிரகாஷ் ராஜ்.
பிரகாஷ்ராஜ் தமிழில் முதன் முறையாக இயக்கிய தோனி படத்துக்கு இளையராஜாதான் இசையமைத்தார். அதுமட்டுமல்ல, கடந்த ஆண்டு இளையராஜா சென்னையில் நடத்திய பிரமாண்ட இசை நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்தார் பிரகாஷ்ராஜ்.
பிரகாஷ் ராஜ் அடுத்து இயக்கும் உன் சமையலறையில் படத்துக்கும் இசைஞானிதான் இசை.
இந்த நிலையில் எஸ்ஜே சூர்யா இயக்கும் இசை படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் பிரகாஷ் ராஜ். ஆனால் கதையை முழுசாகக் கேட்டபிறகு விலகிவிட்டார்.

காரணம் இளையராஜா - ஏ ஆர் ரஹ்மானின் இசைப் போட்டியை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளாராம் எஸ்ஜே சூர்யா. பல காட்சிகள் இளையராஜாவை அவமதிப்பது போலிருப்பதால், இந்தப் படமே எனக்கு வேண்டாம் என்று கூறி ஒதுங்கிக் கொண்டாராம்.
மரியாதை தெரிந்த மனிதர்!

டெல்லி கிரிக்கெட்: கடுமையாகப் போராடி இந்தியாவுக்கு 'த்ரில்' லான ஆறுதல் வெற்றி!!

Ms Dhoni Doubtful 3rd Odi Due Sore Back
டெல்லி கிரிக்கெட்: கடைசி நேர திருப்பத்தில் பெரும் போராட்டத்தில் இந்திய அணிக்கு த்ரில்லான ஆறுதல் வெற்றி!!
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற பாகிஸ்தானுடனான கடைசி ஒருநாள் போட்டியில் கடைசி நேர திருப்பத்தில் கடுமையான போராட்டத்துக்கு இடையே த்ரில்லாக 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. ஒருநாள் போட்டியில் தொடர் தோல்விகளை சந்தித்த இந்தியாவுக்கு இது ஆறுதல் வெற்றி!
இந்தியா வருகை தந்துள்ள பாகிஸ்தான் அணியுடனான 2 ஒருநாள் போட்டிகள் சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்தியா தோல்வியை சந்தித்தது. இன்றைய போட்டியில் ஷேவாக் இடம்பெறவில்லை. ரஹானேவும் அசோக் திண்டாவுக்குப் பதில் சமி அகமது சேர்க்கப்பட்டனர்.
சொதப்பல் இந்தியா
போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோணி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக காம்பீரும் ரஹானேவும் களமிறங்கினர். 4.3-வது ஓவரில் இந்திய அணி 19 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ரஹானே அவுட் ஆனார். அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதைத் தொடர்ந்து மேலும் சில ஓவர்கள் தாக்குப் பிடித்த காம்பீர் 8.4வது ஓவரில் 15 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இவர்களைப் போலவே கோஹ்லி 7 ரன்களில் வெளியேறினார். 15.5-வது ஓவரில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த யுவராஜ்சிங் அவுட் ஆனார். அவர் 23 பந்துகளில் 23 ரன்களை எடுத்திருந்தார். இந்திய அணி முக்கிய 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த போது மொத்தம் 63 ரன்களே எடுத்திருந்தது.
167 ரன்கள்..
பின்னர் டோணியும் ரெய்னாவும் சிறிது ரன்களை சேர்க்க ஒருவழியாக 100 ரன்களைக் கடந்தது இந்திய அணி. 111 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் ரெய்னா அவுட் ஆனார். அடுத்து வந்த அஸ்வின் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். இந்திய அணி 131 ரன்களை எடுத்த போது டோணியும் அவுட் ஆனார். பின்னர் எவரும் நிலைத்து நிற்கவில்லை. 43.4 -வது ஓவரில் 167 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி விக்கெட்டையும் இந்தியா பறிகொடுத்தது. பாகிஸ்தான் வெல்ல 168 ரன்கள் என்ற எளிதான இலக்கை நிர்ணயித்தது.
பாகிஸ்தானும் தடுமாற்றம்
பாகிஸ்தானின் தொடக்க வீரர்களாக அதிரடி மன்னன் ஜாம்ஷெட்டும் கம்ரன் அக்மலும் களமிறங்கினர். தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்தார் புவனேஷ்வர். 2.1-வது ஓவரில் அக்மலை சாய்த்தார். அடுத்த 6.5வது ஓவரில் யூனூஸ் கானையும் புவனேஷ்வர் வெளியேற்றினார். அந்த அணியின் தூணான ஜாம்ஷெட் 34 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் அகப்பட்டு வெளியேறினார். கேப்டன் மிஸ்பா உல்ஹக்கு உமர் அக்மலும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை 100 ரன்களைக் கடக்க வைத்தனர். 113 ரன்களை அந்த அணி எடுத்த நிலையில் 34.1 -வது ஓவரில் அஸ்வின் பந்தில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் மொத்தம் 39 ரன்களை எடுத்திருந்தார். பின்னர் உமர் அக்மலுடன் சோயப் மாலிக் இணைந்தார். ஆனால் மாலிக் 5 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மாவின் பந்தில் எல்.பி.டபிள்யூ. அவுட் ஆகினார். அப்போது பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை எடுத்திருந்தது.
கடைசி நேர திருப்பம்
நிலைத்து நின்று 25 ரன்களை எடுத்திருந்த உமர் அக்மல் 39.2வது ஓவரில் ஜடேஜா பந்தில் அவுட் ஆனதால் ஆட்டம் பரபரப்பானது. ஓவர்கள் இருந்தாலும் பாகிஸ்தானின் விக்கெட்டுகள் சடசடவென சரிந்ததால் ஏதாவது திருப்பம் ஏற்படும் என்ற நிலை உருவானது. 7 ஓவர்களில் 30 ரன்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் ஆடுகளம் பரபரப்பானது. ஒரு கட்டத்தில் 24 பந்துகளில் 24 ரன்களை எடுக்க வேண்டிய நிலை உருவானதால் ரசிகர்களிடம் கடைசி நேர டென்ஷன் தொற்றிக் கொண்டது.
கடைசி ஓவர்களில் டென்ஷன்
இந்த டென்ஷ்ன் பாகிஸ்தானின் உமர் குல் 11 ரன்கள் எடுத்த நிலையில் 46.2-வது ஓவரில் அவுட் ஆக பாகிஸ்தானின் ஸ்கோர் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களாக இருந்தது. அந்த அணி வெற்றி பெற 22 பந்துகளில் 24 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நெருக்கடிக்குப் போனது. இதனால் ரசிகர்களிடையே டென்ஷன் இன்னும் உச்சமானது. 11 ரன்களுடன் களத்தில் இருந்த ஹபீசுடன் அஜ்மல் இணைந்தார். ஆனால் வந்த வேகத்தில் அஜ்மல், சமி அகமது பந்தில் டோணியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆன ஆடுகளத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். இந்தியா வெற்றியை நோக்கிப் பயணிப்பது உறுதியானது. அப்போது 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. ஆனால் வந்த வேகத்தில் ஜூனைத்கான் டக் அவுட் ஆகிவிட இந்தியா த்ரில் வெற்றியை கொண்டாட தயாரானது.
15 பந்துகளில் 23 ரன்களை எடுத்தாக வேண்டிய நிலையில் முகமது இர்பான் களமிறங்கினார். கடைசி இரண்டு ஓவர்கள்தான் என்ற நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் அடித்து விளையாடினர். இதனால் 9 பந்துகளில் 16 ரன்கள் என்ற நிலை உருவானது. இஷாந்த் சர்மா வீசிய 49- வது ஓவரில் ரன்களை குவித்த பாகிஸ்தானின் ஹபீஸ் விக்கெட் 48.5-வது ஓவரில் பறிபோக இந்திய அணி கடும் போராட்டத்துக்கு இடையே 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பாகிஸ்தான் அணியால் 157 ரன்களை மட்டும் எடுக்க முடிந்தது
3 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் ஆறுதல் வெற்றியைப் பெற்றுள்ளது.