Thursday, 17 January 2013

'தலைவா' அரசியல் படமா? விஜய் விளக்கம்

சென்னை: தான் நடிக்கும் தலைவா அரசியல் படமல்ல என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு தலைவா என்று பெயர் வைத்து போஸ்டர்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் விஜய் கையசைக்கும் போஸ்டரைப் பார்க்கையில் ஏதோ அரசியல் படம் என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் தலைவா படத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறிய விஜய் கதை குறித்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.


Is Thalaivaa Political Movie
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சுனில் சந்திரபிரகாஷ் ஜெயின் கூறுகையில்,
தலைவா என்ற தலைப்பு படத்தின் கதைக்கும், விஜயின் இமேஜுக்கும் மகிவும் பொருத்தமாக இருந்ததால் அதை தேர்வு செய்துள்ளோம். மேலும் போஸ்டர்களும் அதன்படி தான் டிசைன் செய்யப்பட்டன என்றார்.
விஜய் எப்பொழுது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் அவர் அரசியலுக்கு நிச்சயம் வருவார் ஆனால் அதற்கு காலம் ஆகும் என்று அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment