Monday, 7 January 2013

கோஹ்லி நல்லா விளையாடுங்க, கடிதம் எழுதி வைத்துவிட்டு பிஇ மாணவி தூக்கு போட்டு தற்கொலை

 Bhopal Girl Ends Life Asks Virat Kohli To Play Well
போபால்: போபாலில் பிஇ முதலாம் ஆண்டு படித்த 18 வயது மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தான் சாகும் முன்பு எழுதிய கடிதத்தில் கிரிக்கெட் வீரர் விராத் ஜோஹ்லி நன்றாக விளையாட வேண்டும் என்று எழுதி வைத்துள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள பினா பகுதியில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ முதலாம் ஆண்டு படித்து வந்த 18 வயது மாணவி கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். இந்நிலையில் அவர் சாகும் முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
நான் கோஹ்லியின் தீவிர ரசிகை. கோஹ்லி ஒரு அருமையான கிரிக்கெட் வீரர். அவர் வருங்காலத்தில் பல்வேறு சாதனைகள் படைப்பார். அவர் நன்றாக விளையாட வேண்டும். என் குடும்பத்தார் யாராவது கோஹ்லியை சந்தித்தால் நான் அவரது தீவிர ரசிகை என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று மாணவியின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment