Monday, 7 January 2013

சித்ரவதை செய்த நேபாள ராணுவ தளபதி- இங்கிலாந்தில் சிக்கினார்

லண்டன்: நேபாளத்தில் மாவோயிஸ்டுகளுடான உள்நாட்டுப் போரில் அப்பாவி பொதுமக்களைச் சித்திரவதை செய்ததாக குற்றம்சாட்டப்படும் ராணுவத் தளபதி லாமாவை இங்கிலாந்து அரசு கைது செய்துள்ளது.
நேபாளத்தில் மாவோயிஸ்ட்கள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்தபோது அவர்களை ஒடுக்க அந்நாட்டு ராணுவம் நடவடிக்கை எடுத்தது. அந்தக் காலகட்டத்தில் சந்தேகத்துக்கு இடமானவர்கள் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டனர். 2005ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட நபர்களைச் சித்திரவதை செய்ததாக நேபாள ராணுவ உயரதிகாரி லாமா(46) மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவர் தற்போது தென் சூடானில் ஐ.நா. அமைதிப் படையில் சேவையாற்றி வருகிறார். அவர் அண்மையில் இங்கிலாந்தில் தங்கியிருந்த போது, பாதிக்கப்பட்டோரில் ஒருவரான ராவத் அந்நாட்டு போலீசிடம் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்தின் செயின்ட் லெனார்ட்ஸ் ஆன் சீ நகரில் தங்கியிருந்த லாமாவைக் அந்நாட்டுப் போலீசார் கைது செய்தனர்.
இங்கிலாந்து அரசின் இந்நடவடிக்கையை லண்டனை அடிப்படையாகக் கொண்ட ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை அமைப்பு வரவேற்றுள்ளது. இதனிடையே, ராணுவ அதிகாரி லாமா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக காத்மாண்டில் உள்ள இங்கிலாந்து தூதரை நேபாள அரசு சம்மன் அனுப்பி வரவழைத்தது. மேலும் தளபதி லாமாவை உடனடியாக விடுதலை செய்யுமாறும் நேபாளம் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment