இசைஞானி இளையராஜாவை அவமதிப்பது போல காட்சிகள் இருந்ததால் இசை படத்தில் நடிக்க மறுத்து வெளியேறிவிட்டார் பிரகாஷ் ராஜ்.
இளையராஜாவுடன் சமீப காலமாக மிக நெருக்கமாக இருந்து வருகிறார் பிரகாஷ் ராஜ்.
பிரகாஷ்ராஜ் தமிழில் முதன் முறையாக இயக்கிய தோனி படத்துக்கு இளையராஜாதான் இசையமைத்தார். அதுமட்டுமல்ல, கடந்த ஆண்டு இளையராஜா சென்னையில் நடத்திய பிரமாண்ட இசை நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்தார் பிரகாஷ்ராஜ்.
பிரகாஷ் ராஜ் அடுத்து இயக்கும் உன் சமையலறையில் படத்துக்கும் இசைஞானிதான் இசை.
இந்த நிலையில் எஸ்ஜே சூர்யா இயக்கும் இசை படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் பிரகாஷ் ராஜ். ஆனால் கதையை முழுசாகக் கேட்டபிறகு விலகிவிட்டார்.
காரணம் இளையராஜா - ஏ ஆர் ரஹ்மானின் இசைப் போட்டியை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளாராம் எஸ்ஜே சூர்யா. பல காட்சிகள் இளையராஜாவை அவமதிப்பது போலிருப்பதால், இந்தப் படமே எனக்கு வேண்டாம் என்று கூறி ஒதுங்கிக் கொண்டாராம்.
மரியாதை தெரிந்த மனிதர்!
No comments:
Post a Comment