டெல்லி:
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கண்டிப்பாக
மேட்ச் பிக்ஸிங் நடந்துள்ளது என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின்
முன்னாள் வீரர் பால்நிக்சன் புகார் தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான நேற்றைய போட்டி யாரும் எதிர்பாராத வகையில் கடைசி ஓவர்கள் மிகவும் பரபரப்பாக இருந்தது. பாகிஸ்தான் வெற்றி பெறக் கூடிய நிலையில்தான் இருந்தது. ஆனால் கடைசி சில ஓவர்களில் வேண்டுமென்றே பாகிஸ்தான் விளையாடியதாகவே அனைவரும் எளிதாக யூகிக்கும் வகையில் ஆட்டம் இருந்தது. நேற்றைய போட்டியில் நிச்சயம் மேட்ச் பிக்ஸிங்குக்கு இடம் இருக்கிறது என்றே சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பால்நிக்சன், இந்த ஆட்டத்தை பார்க்கும்போது பாகிஸ்தான் கடைசி நேரத்தில் தோற்கும் வகையில் ஆடியது நன்றாக தெரிந்தது. இந்தியாவின் 12-வது வீரராக மேட்ச் பிக்ஸிங் தரகர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று தட்டிவிட்டு பற்ற வைத்திருக்கிறார்.
பால்நிக்சனின் இந்தக் கருத்தால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இதே நிக்சன் கடந்த ஆண்டு எழுதிய புத்தகத்தில், 20 ஓவர் போட்டி தொடர்பாக இந்திய மேட்ச் பிக்ஸிங் தரகர் ஒருவர் 5 மில்லியன் டாலர் தமக்கு தர முன்வந்ததாகக் கூறி சர்ச்சையைக் கிளப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment