Tuesday, 8 January 2013

விஸ்வரூபம் ரூ. 150 கோடியை வசூலிக்காவிட்டால் அது தோல்விப் படம்... கமல் படபடப்பு பேட்டி !!!

விஸ்வரூபம் ரூ. 150 கோடியைத் தாண்டியாக வேண்டும். அப்படி இல்லை என்றால் என்னைப் பொறுத்தவரை அது தோல்விப்படம்தான். எனது முயற்சிகள் பலவீனமானவை என்பதை நான் ஒத்துக் கொள்வேன். ஆனால் முதல் வாரத்திலேயே நாங்கள் ரூ.150 கோடியைத் தாண்டி விடுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

எனது படங்களிலேயே மிகப் பெரிய அளவில் செலவு செய்யப்பட்டு, மிகவும் நேர்த்தியாக தயாராகியுள்ள படம் இது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. மேலும் நாங்கள் நிறைய சாதிக்கத் திட்டமிட்டு களம் இறங்கிப் பணியாற்றினோம். அதற்கேற்ப அருமையான டெக்னீசியன்கள் கிடைத்தார்கள். அனைவருமே சிறப்பானவர்கள். மிகச் சிறந்த அணியுடன் நான் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன்.
 
இன்னும் சாதிக்க வேண்டும் , 150 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். ஆனாலும் எனக்கு திருப்தி என்பது வரவே இல்லை. இன்னும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அதிகம் இருக்கிறது. இன்னும் கற்க வேண்டியது நிறைய உள்ளது
 
அடிப்படையில் நான் டெக்னீசியன்தான். தற்செயலாகத்தான் நடிக்க வந்து விட்டேன். எனவே எனது நடிப்பு மக்களால் விரும்பப்படவில்லை என்றால் உடனே வேறு வேலை பார்த்துக்கொண்டு போய் விடுவேன்.

எனக்கு நிச்சயம் போட்டிகள் உண்டு.எனக்கு என்றில்லை எல்லோருக்குமே உண்டு. எனக்கு 18 வயது முதல் 65 வயது வரையிலானார் பலர் போட்டியாக உள்ளனர். ஆனால் போட்டி இருப்பதுதான் ஆரோக்கியமானது. அப்போதுதானே நாம் சாதிக்க முடியும் என்றார் கமல்.
.

No comments:

Post a Comment