சென்னை: 12.3 சதவீத சேவை வரிக்கு எதிராக திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் முடிந்து போனது.
ரஜினி மட்டும் வராமல் போயிருந்தால் ரொம்ப காமெடியாகப் போயிருக்கும் என்று சொல்லும் அளவுக்குதான் இந்த உண்ணாவிரதம் இருந்தது.
சம்பளம் வாங்குவதில் தங்களை முன்னணி நடிகர் - நடிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் நடிகர்கள் பெருமளவில் வரவில்லை.

சும்மனாங்காட்டியும்...
திரையுலகின்
சார்பில் எந்த போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டாலும் நடிகர்
சங்க நிர்வாகிகள் முதலில் குறிவைப்பது ரஜினியைத்தான். 'ரஜினி, கமெலெல்லாம்
வருவார்கள்.. வராவிட்டால்... அவ்ளோதான்' என்பது போல கெத்து காட்டுவார்கள்.
நிகழ்ச்சி நடக்கும் நாளன்று ரஜினி மட்டும் வந்திருப்பார்.
சொல்லி வைத்த மாதிரி முன்னணி நடிகர்கள் ஒருவரும் எட்டிக் கூடப் பார்க்க மாட்டார்கள். நடிகர் சங்க நிகழ்ச்சிகள் பலவற்றிலும் அடிக்கடி பார்க்கும் உண்மை இது.

விஜய்
அங்கு வந்த பிறகுதான், நடிகர் சங்க செட் பிராபர்ட்டிகளான சரத்குமார்,
ராதாரவி, வாகை சந்திரசேகர், ராதிகா, சத்யப்ரியா போன்றவர்கள் மட்டுமே
வந்திருப்பது தெரிந்தது. முன்னனி நடிகர்களில் விஜய் மற்றும் சூர்யா மட்டுமே
வந்திருந்தனர். கார்த்தியும் ஆஜராகியிருந்தார்.
அஜீத், தனுஷ், சிம்பு உள்ளிட்டோர் எங்கே
அஜீத், தனுஷ், சிம்பு உள்ளிட்டோர் எங்கே?
நடிகர் அஜீத், சிம்பு, தனுஷ், ஜீவா, ஆர்யா உள்பட இளம் நடிகர்கள் ஒருவர் கூட
இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை. இவர்களில் சிம்பு நடிகர் சங்க
நிர்வாகிகளில் ஒருவர். படப்பிடிப்பு, வெளியூர் என எந்த பொய்யும் சொல்ல
முடியாது இவர்கள். காரணம், அனைத்துப் படப்பிடிப்புகளும் இன்று ரத்து
செய்யப்பட்டுவிட்டன.
நடிகைகளுக்கு என்ன ஆச்சு?
நடிகர்களிலாவது ரஜினி என்ற பெருந்தலை வந்துவிட்டதால், மற்றவர்கள் வராதது
தெரியவில்லை. ஆனால் நடிகைகளில் இன்றைக்கு முன்னணியில் உள்ள ஒருவர் கூட
வரவில்லை. வந்த ஒரே இளம் நடிகை மட்டும்தான்.
மற்றபடி வடிவுக்கரசி, மும்தாஜ், ஜெயசித்ரா, குட்டி பத்மினி என இன்றைய
ரசிகர்களுக்கு தெரியாத பழைய நடிகைகள்தான் ஆங்காங்கே தெரிந்தனர்.
என்ன செய்வார் சரத்குமார்?
இந்த முறை உண்ணாவிரதத்துக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்.
காரணம், இது ஒவ்வொரு நடிகர் நடிகைக்கும் நடிகர் சங்கம் நடத்தும் போராட்டம்
என்று சரத்குமார் சொல்லியிருந்தார். என்ன செய்யப் போகிறாரோ!
No comments:
Post a Comment