தாராபுரம்: இந்திய ஊடகங்களை ஒரே நாளில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும்
தாராபுரம் கடலை வியாபாரி ராமலிங்கம் தமது ரூ.28,000 கோடி மதிப்புள்ள
அமெரிக்க பத்திரங்கள் தொடர்பாக ஜனவரி 11-ல் விவரிக்கப் போவதாக
கூறியுள்ளார்.
ரூ.28,000 ஆயிரம் கோடி மதிப்புள்ள அமெரிக்க கடன் பத்திரங்களை வைத்துக்
கொண்டு அனைவரது மண்டையைப் பிய்க்க வைத்து வருகிறார் கடலை வியாபாரி
ராமலிங்கம். அவரிடம் அதிகாரிகள் கேள்விக் கணைகளால் துளைத்துப் பார்த்தாலும்
அசராமல் பதிலளித்து வருகிறார்.
தமது லட்சிய திட்டமாக தொண்டியில் ரூ1.5 லட்சம் கோடி செலவில் கச்சா எண்ணெய்
சுத்திகரிப்பு ஆலை நிறுவியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்
கொண்டிருக்கிறார் கடலை வியாபாரி ராமலிங்கம்.
ராமலிங்கத்தின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் பிரேசில் நாட்டைச்
சேர்ந்த டேனியல் என்பவரதுமுகவரி இருக்கிறது. இப்போது டேனியலை பிடித்து
விசாரிக்க சர்வதேச போலீஸ் உதவியை நாடியுள்ளனர்.
இந்திய பிரமுகர் ஒருவரது ஹவாலா ஏஜெண்டாக ராமலிங்கம் இருக்கலாம் என்று
சந்தேகிக்கப்படுகிறது. இது பற்றி என்ன கேட்டாலும் ஜனவரி 11 மீண்டும்
விசாரணைக்கு ஆஜராவேன்.. அதன் பிறகு உண்மைகளை சொல்லுகிறேன் என்றார்.
என்னவென்று
No comments:
Post a Comment