Thursday, 10 January 2013

8 வது மாடியில் இருந்து விழுந்தும் பாதிப்பில்லை! எமனைப் பார்த்து சிரித்த சிறுவன்!!

 Ukraine 3 Year Old Boy Falls Eight Storeys
உக்ரைன்: உக்ரைன் நாட்டில் எட்டாவது மாடியில் இருந்து விழுந்தும் எந்த வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பியுள்ளான் 3 வயது சிறுவன்.
அந்த அதிசய சிறுவன் வடகிழக்கு உக்ரைன் நாட்டில் உக்ரைனியன் நகரில் வசித்து வருகிறான். எட்டாவது மாடியில் தனது தயாருடன் வசித்து வரும் அந்த சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த போது வீட்டின் ஜன்னலை திறந்து எதிர்பாராத விதமாக 8வது மாடியில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்தான்.
அவனது அதிர்ஷ்டம், ஜன்னலுக்கு நேர்கீழே, அவன் விழுந்த இடத்தில், மிருதுவான பனிக்கட்டி குவியல் இருந்தது. இதனால் காயங்களுடன் உயிரிழக்காமல், அந்த சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். சில
சிராய்ப்புகளுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் அவனது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது போன்ற உயரமான கட்டிடங்களில் இருந்து கீழே விழுந்த சிலர், அரிதாக உயிர் பிழைத்த சம்பவங்கள் இதற்கு முன்னரும் நிகழ்ந்துள்ளன.
2008-ம் ஆண்டு, அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில், ஜன்னல் கண்ணாடியை துடைக்கும்போது 47வது மாடியில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிர் பிழைத்தார்.



இதேபோல் சீனாவில் 2009-ம் ஆண்டு 27வது மாடியின் ஜன்னல் வழியே கீழே விழுந்த 29வயது சீனப்பெண் ஒருவர் உயிர் தப்பினார்.
2010-ம் ஆண்டு 20வது மாடி ஜன்னல் வழியே தவறி விழுந்த 10 வயது சிறுவன், கீழே நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்ததில் அவன் காயங்களுடன் தப்பினான் என்பது குறிப்பிடத்தக்கது.



ஆயுசு இருந்தால் 60 வது மாடியில் இருந்தும் தப்பியவர்கள் இருக்கின்றனர். அதேசமயம் ஆயுசு முடிந்தால் புல் தடுக்கி விழுந்து இறந்தவர்களும் பலர் உண்டு என்பதுதான் உண்மை.

No comments:

Post a Comment