Monday, 7 January 2013

பெரும் பணம் கொடுத்து 15 வயது சிறுமியை மணந்த 90 வயது சவூதி ஷேக் தாத்தா...!

துபாய்: பெரும் பணத்தை வரதட்சணையாக கொடுத்து 15வயது சிறுமியை மணந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் 90 வயதான சவூதி அரேபியா நபர் ஒருவர். இந்த வயது முதிர்ந்த தாத்தாவுக்குக் கட்டி வைக்கப்பட்ட அந்த சிறுமி, 2 நாட்கள் பெட்ரூம் கதவை மூடிக் கொண்டு பயத்தில் வெளியே வராமலேயே இருந்துள்ளார். 
பின்னர் வீட்டிலிருந்து தப்பி தனது வீட்டுக்கு ஓடி விட்டார். சவூதி அரேபியாவில் இந்த திருமணம் பெரும் பரபரப்பையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தனது திருமணம் சட்டப்பூர்வமானதே என்று அந்த 90 வயது சவூதி அரேபிய நபர் கூறுகிறார். மேலும், அந்தச் சிறுமியை மணப்பதற்காக 17,500 டாலர் பணத்தை சிறுமியின் பெற்றோரிடம் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். 
                    அந்த சிறுமி ஏமன் நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும், சவூதியைச் சேர்ந்த தாயாருக்கும் பிறந்தவர் ஆவார். பெரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு விட்டு திருமணம் செய்து வைத்து விட்டுப் பின்னர் தற்போது மீண்டும் சிறுமியை வீட்டுக்கு அழைத்துப் போய் விட்டனர் அவரது சகோதரர்கள். இது அநீதியானது. இதை ஏற்க முடியாது. அவர்கள் மறுபடியும் எனது மனைவியைக் கொண்டு வந்து விட வேண்டும் என்றும் கொந்தளித்துள்ளார் 
 
இந்தத் தாத்தா... இந்த ஷேக் தாத்தாவின் செயலால் சவூதி அரேபியாவில் மனித உரிமை ஆர்வலர்களும், பெண்கள் நல அமைப்பினரும் கடுமையாக கொந்தளித்துக் குரல் கொடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment