Tuesday, 8 January 2013

பாக். ராணுவத்தின் வெறி.. இந்தியாவுக்குள் ஊடுறுவி 2 வீரர்களைக் கொன்று ஒருவரின் தலையை கொய்து சென்றது

டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய வீரர்கள் இந்திய வீரர் ஒருவரின் தலையைத் துண்டித்ததுடன், மேலும் ஒரு வீரரை கொன்றுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மெந்தார் செக்டருக்குள் பாகிஸ்தானிய படை நேற்று அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. சுமார் அரை மணிநேரம் நடந்த இந்த தாக்குதலில் 13வது ராஜ்புத்தானிய ரைபில்ஸ் பிரிவைச் சேர்ந்த லான்ஸ் நைக்ஸ் ஹேம்ராஜ் மற்றும் சுதாகர் சிங் ஆகிய இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். அதில் ஒரு வீரரின் தலையை பாகிஸ்தானிய வீரர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் விட்டுச் சென்ற வீரரின் உடலும் மேசமாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் கொலைவெறித் தாக்குதல் குறித்து இந்திய ராணுவம் எந்த தகவலையும் வெளியிட விரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து நேற்று கொச்சியில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பாகிஸ்தான் ராணுவத்தினர் கூறுகையில்,
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய வீரர்கள் இந்திய வீரர் ஒருவரின் தலையைத் துண்டித்ததுடன், மேலும் ஒரு வீரரை கொன்றுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மெந்தார் செக்டருக்குள் பாகிஸ்தானிய படை நேற்று அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. சுமார் அரை மணிநேரம் நடந்த இந்த தாக்குதலில் 13வது ராஜ்புத்தானிய ரைபில்ஸ் பிரிவைச் சேர்ந்த லான்ஸ் நைக்ஸ் ஹேம்ராஜ் மற்றும் சுதாகர் சிங் ஆகிய இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். அதில் ஒரு வீரரின் தலையை பாகிஸ்தானிய வீரர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் விட்டுச் சென்ற வீரரின் உடலும் மேசமாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் கொலைவெறித் தாக்குதல் குறித்து இந்திய ராணுவம் எந்த தகவலையும் வெளியிட விரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து நேற்று கொச்சியில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பாகிஸ்தான் ராணுவத்தினர் கூறுகையில், எங்கள் ராணுவ படை இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய படை எங்கள் எல்லைக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதை உலக பார்வையில் இருந்து மறைக்க நாங்கள் அத்துமீறி நுழைந்ததாக பிரச்சாரம் செய்கிறார்கள் என்றனர்.
 Pak Troops Kill Two Jawans Behead Mutilate One Of Them
 
 
 
 எங்கள் ராணுவ படை இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய படை எங்கள் எல்லைக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதை உலக பார்வையில் இருந்து மறைக்க நாங்கள் அத்துமீறி நுழைந்ததாக பிரச்சாரம் செய்கிறார்கள் என்றனர்.

No comments:

Post a Comment